பொலிஸ் அலுவலகத்தின் முன்னால் தீக்குளிப்பு
இந்தியாவில் திருப்பூர் பொலிஸ் அலுவலகம் முன்பு தொழிலாளி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ். வியாபாரம் செய்து வருபவர். இந்நிலையில் ரவி என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் காளிதாசிடம் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த காளிதாஸ் இன்று காலை 10.30 மணி அளவில் திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகம் முன்பு யாரும் எதிர்பாராத விதமாக அவர் தீக்குளித்தார். இதில் அவர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த பொலிஸார் தீயை அணைத்து காளிதாசை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் திருப்பூர் மஜிஸ்திரேட் கிருஷ்ணன் முன்னிலையில் காளிதாஸ் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.