தேசத்திற்கு மகுடம் உத்தியோகபூர்வ மொபிடெல்
தேசத்திற்கு மகுடம் 2012 இனது உத்தியோகபூர்வ கையடக்கத் தொலை பேசி சேவைகள் வழங்குனராக மொபிடெல்
ஸ்ரீ லங்கா ரெலிகொம் மொபிடெல், தேசத்திற்கு மகுடம் 2012 கண்காட்சியின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி சேவைகள் வழங்குனராக செயற்படவுள்ளது. ஆறாவது முறையாக நடைபெறும் இத்தேசிய கண்காட்சியானது பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று அனுராதபுரத்திலுள்ள ஓயாமடுவவில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 10ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இலங்கையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப துறையை மேம்படுத்துவதற்கு பிரதான பங்கு வகித்தவரும் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப கௌரவ அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களின் வழிகாட்டலில், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப ஆற்றலை 75% இனால் அதிகரித்து இலங்கையை ஆசியாவின் அறிவு மையமாக மாற்றும் அதிமேதகு ஜனாதிபதியின் நோக்கத்திற்கு அமைவாக தேசத்தை மேலும் தொழில்நுட்ப மயமானதாக முன்னெடுத்துச் செல்ல மொபிடெல் ஆர்வம் கொண்டுள்ளது.
தேசிய கையடக்கத் தொலைபேசிச் சேவைகள் வழங்குனரான மொபிடெல், தனது தேசத்திற்கு மகுடம் 2012 கண்காட்சிக் கூடத்தில் புதிய தொழினுட்ப கண்டுபிடிப்புகளையும் தனது புதிய உற்பத்திகள் மற்றும் சேவைகளையும் மக்களுக்கு காட்சிப்படுத்தவுள்ளது. மக்களுக்கு தேசத்தின் பெருமைகளையும் அபிவிருத்தி இலக்குகளையும் எடுத்துக்கூறும் ஒரே நோக்கில் நடாத்தப்பட்டு வரும் இத்தேசிய கண்காட்சிக்கு மொபிடெல் தொடர்ந்து 4ஆவது வருடமாக தனது அனுசரணையை வழங்குகின்றது.
பட விளக்கம்:
தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழினுட்ப கௌரவ அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களுக்கு மொபிடெலின் பிரதான நிறைவேற்று அதிகாரி லலித் டி.சில்வா அவர்கள் அனுசரணைக்கான அடையாளத்தை வழங்குவதையும் மொபிடெல் நிறுவனத்தின் குழு திட்டமிடல் மற்றும் சந்தைப்படுத்தல் சிரேஷ்ட பொது முகாமையாளர் ஜனக ஜயலத் மற்றும் விற்பனை மற்றும் விநியோக சிரேஷ்ட பொது முகாமையாளர் சந்திக விதாரண ஆகியோர் அருகில் இருப்பதையும் படத்தில் காணலாம்.